Sunday 5 June 2011

நாடாளுமன்றத்தில் அண்ணா.

இந்தி மொழி சம்பந்தமான தீர்மானத்தின்போது அண்ணாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அப்போது அண்ணா மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.அவையில் இருந்த ஷேக் கோவிந்த்தாஸ்,மெட்ராஸ் ஸ்டேட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை அகற்றிவிட்டு பிராந்திய உணர்வோடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோருவது பிரிவினைவாதம் என்று குறிப்பிட்டார்.

                                இதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமெண்ட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,அதுவும் உலகம் முழுதும் உள்ளம் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை மாற்றி உங்கள் தாய்மொழியில் (இந்தி)பார்லிமெண்டை லோக்சபா என்றும்,கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்களோ,அதைவிட மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன் என்றார்.

                                 தொடர்ந்து பேசிய வட இந்திய உறுப்பினர்கள் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழி இந்தி மொழியாகும்.அதனால் லோக்சபா,ராஜ்யசபா என்று பெயர் சூட்டினோம் என்றார்கள்.

                                  விடுவாரா அண்ணா? இந்தியாவில் எங்கே பார்த்தாலும் நமது கண்ணுக்கு காக்காய்கள்தான் தெரிகிறது.காட்டுப்பகுதியில் எங்கேயோ அபூர்வமாகத்தான் மயில் தென்படுகிறது.அபூர்வமாக தெரியும் மயிலை இந்தியாவின் தேசிய பறவையாக அங்கீகரித்துள்ளோம்.கண்ணுக்குத்தெரிகிற காக்கை இனத்தை ஏன் தேசியப்பறவையாக அங்கீகரிக்கவில்லை என்றார்.

           நான் தொகுத்து,எங்களுடைய சூர்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற களஞ்சியம்என்ற நூலிலிருந்து.

நாடாளுமன்றம் பற்றிய முழுமையான தகவலகள்,சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை (எம்.பி.க்கள்,அமைச்சர்கள் ,மாநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் மேலும் அறிய www.suryapublications.tk
 உங்கள் ஆதரவை எதிர்நோக்கிவலைப்பதிவில் ஏ.கே.இராசன்.